வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய ஜெயில் வார்டன் உள்பட 5 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய ஜெயில் வார்டன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவருக்கும், மதுரை பெரியசாமிநகரை சேர்ந்த முனீஸ் திவாகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில், முனீஸ் திவாகர் விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் ஜெயில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின்போது நந்தினியின் குடும்பத்தினர் தங்க நகைகள், பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், முனீஸ் திவாகர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், முனீஸ் திவாகர் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் முனீஸ் திவாகர், அவரது தந்தை ராமசந்திரன், தாய் வாசுகி, உறவினர்கள் ராஜா, சுமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story