ரூ.1¼ கோடி உண்டியல் வருமானம்
ரூ.1¼ கோடி உண்டியல் வருமானம்
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்த குண்டம் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 473, தங்கம் 372.150 கிராம், வெள்ளி 2.57 கிலோ இருந்தது. இந்த பணியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்சினி, பேரூர் சரக ஆய்வாளர் கீதா, அன்னூர் சரக ஆய்வாளர் மல்லிகா, கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story