மாரியம்மன் கோவில் மாசி உற்சவம் கொடியேற்றம்


மாரியம்மன் கோவில் மாசி உற்சவம் கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:04 PM IST (Updated: 25 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோவில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்புவனம், 
திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோவில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசி திருவிழா
திருப்புவனம் புதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது. 
முன்னதாக புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கோவிலுக்கு எழுந்தருளினர். அதன் பின்னர் மாரியம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது‌. 
இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
நேர்த்திக்கடன்
அதன்பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி அன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது விரதம் இருந்து வரும் பக்தர்கள் அன்று காலை முதல் இரவு வரை தீச்சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில், மாவிளக்கு, உருவபொம்மை எடுத்தல், கரும்புள்ளி- செம்புள்ளி குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை செலுத்த உள்ளனர். 
மேலும் காப்பு கட்டிய பக்தர்கள் கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கொடியேற்று விழாவை முன்னிட்டு திருப்பு வனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story