‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
சலங்கபாளையம் பேரூராட்சி மேட்டூர் காலனியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள காரைகள் உடைந்து அதில் உள்ள கம்பி வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேட்டூர் காலனி.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் அருகே கருக்கம்பாளையம் செல்லும் ரோடு வருகிறது. அந்த ரோட்டில் 3 இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருக்கம்பாளையம்.
ரோட்டில் பள்ளம்
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூருக்கு ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஆனால் அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை. இதன்காரணமாக அந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சி்க்கி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். இதேபோல் கார் போன்ற வாகனங்களும் இந்த பள்ளத்தில் சிக்கி உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டில் உள்ள அந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணசாமி, அந்தியூர்.
பன்றிகளால் நோய் பரவும் அபாயம்
பவானிசாகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் முன் பகுதியில் ஏராளமான பன்றிகள் படுத்து கிடக்கிறது. மேலும் அந்த வழியாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பகுதி அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே மருத்துவமனை பகுதியை தூய்மையாக வைக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பவானிசாகர்.
Related Tags :
Next Story