நெல்லை:ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை:ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2022 2:52 AM IST (Updated: 26 Feb 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நெல்லை:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கலந்தாய்வில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டிப்பதாக கூறியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். நெல்லை கல்வி மாவட்ட செயலாளர் துரை பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பிரம்ம நாயகம், நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் பேசினர். இதில் சேரன்மாதேவி கல்வி மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story