ரூ10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரூ10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையத்தை டிஐஜி ஆனிவிஜயா திறந்து வைத்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
போலீசார் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் போலீஸ் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பெயர் பலகை திறந்து வைத்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜகாளீஸ்வரன், ரமேஷ்பாபு, உதவி போலீஸ் சூப்பிண்டு கிரண்ஸ்ருதி, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story