மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2022 5:34 PM IST (Updated: 26 Feb 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் தெப்ப குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம்:
எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் மனைவி ஆனந்தவல்லி (வயது 81). மீனாட்சி சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஆனந்தவல்லி தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு எட்டயபுரத்தில் உள்ள மூத்த மகன் சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்தவல்லி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில், நேற்று காலை எட்டயபுரம் பெரிய தெப்பகுளத்தில் பெண்ணின் உடல் மிதப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பெண்ணின் உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில், இறந்து கிடந்தவர் ஆனந்தவல்லி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தெப்ப குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story