8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், மாநில பொது செயலாளர் ஞானசேகரன், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் கே.ஆர்.சாமி, ஜம்பு, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் திரளான ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பான இடத்தை வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த கூட்டத்தின் முடிவில் ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட பொருளாளர் முரளிதர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story