நஞ்சப்ப சத்திரத்தில் மருத்துவ முகாம்
நஞ்சப்ப சத்திரத்தில் மருத்துவ முகாம்
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அதிகாரிகள் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். அப்போது மீட்பு பணியில் ஈடுபட்ட அந்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராணுவம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த கிராம மக்களுக்கு அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் உறுதி அளித்து இருந்தார்.
அதன்படி வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ராணுவ மைய கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் தொடங்கி வைத்தார். முகாமில் ராணுவ ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் கிராம மக்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இதில் ஏராளமான மக்கள் பயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story