ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தினத்தந்தி 26 Feb 2022 9:45 PM IST (Updated: 26 Feb 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், பிரபு ஆகியோர் ஆனைமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மீன்கரை ரோடு வழியாக வந்த காரை மறித்தனர். 

இதற்கிடையில் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் காரில் இருந்த மூட்டைகளை பிரித்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து காரில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் இருந்த 1100 கிலோ அரிசியை போலீசார் காருடன் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

 இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் கனகராஜ் என்பது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story