ெரயில் பாதையை மின்மயமாக்கும் பணி மும்முரம்
மானாமதுரை -அருப்புக்கோட்டை இடையே ெரயில் பாதையை மின்மயமாக்கும் பணி மும்முரமாக நடை பெறுகிறது.
அருப்புக்கோட்டை,
மானாமதுரை -அருப்புக்கோட்டை இடையே ெரயில் பாதையை மின்மயமாக் கும் பணி மும்முரமாக நடை பெறுகிறது.
மின்மயமாக்கல் பணி
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை 67 கி.மீ. தூர ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதத்திற்குள் இந்த பணிகள் முழுவதையும் முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெறும் என ெரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் ரெயில்கள்
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
தற்போது இந்த பாதையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயில் வாரம் 3 முறையும், புதுச்சேரி- கன்னியாகுமரி ெரயில் வாரம் ஒரு முறையும், விருதுநகர் - திருச்சி ெரயில் வாரத்திற்கு 6 முறையும் இயக்கப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவு பெற்றால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும். ஜவுளி உற்பத்திக்கு பெயர் ெபற்ற அருப்புக்கோட்டையில் நூற்பு மில்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேலைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் ஆகியவை நிறைய உள்ளன. மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்த பிறகு இந்த வழியாக பார்சல் புக்கிங் சேவை வசதியுடன் கூடுதல் ெரயில்களை இயக்கி, சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்க வேண்டும்.
அதேபோல் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை - தூத்துக்குடி ெரயில் பாதை திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story