டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
சமயபுரம், பிப்.27-
சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரும் அதே ஊரை சேர்ந்த இளையராஜா (32), பிரபாகரன் (28) ஆகியோர் நேற்று முன்தினம் அருகே உள்ள ஊருக்கு டிராக்டரில் வைக்கோல் போர் ஏற்றி சென்றனர். பின்னர் மருதூருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். டிராக்டரை முருகானந்தம் (35) என்பவர் ஓட்டி வந்தார். சமயபுரம் அருகே மருதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு உள்ள ரைஸ்மில் அருகே இருக்கும் வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செந்தமிழ்ச்செல்வன், இளையராஜா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த மருதூர் ஊராட்சி தலைவர் தினேஷ், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு செந்தமிழ்செல்வனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இளையராஜா மேல் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story