இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் புகார் அளிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ஆகியோரின் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் ஸ்டேட் வங்கித் தலைமை அலுவலகம் எதிரே காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசார் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது வாட்ஸ்-அப், முகநூல், இணையதளம் மூலம் எவ்வாறெல்லாம் சமீப காலங்களில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினர்.
சைபர் கிரைம் தொடர்பு எண் 1930 குறித்து விளக்கினர். போலீஸ் நிலையத்துக்கு வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளத்திலும் புகார் அளிப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story