காலில் காயத்துடன் தவிக்கும் காட்டுயானை
காலில் காயத்துடன் தவிக்கும் காட்டுயானை
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அருகே இயற்கை எழில்மிகுந்தஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் பலவகையான மான்கள், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், டாப்சிலிப்- பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில், காட்டு யானை ஒன்றின் காலில் எப்படியோ பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த யானைநடக்கமுடியாமல் கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் நின்ற வண்ணம் உள்ளது. அதற்கு தேவையானஉணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் பசியில் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், யானைக்கு எதனால் காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை சக யானையோடு சண்டையிட்டு அதனார் காயம்பட்டு இருக்கலாம். அந்த யானையின் நிலை குறித்து முழுமையாக அறிந்தவுடன் யானைக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story