சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்


சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்
x
சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்
தினத்தந்தி 27 Feb 2022 9:34 PM IST (Updated: 27 Feb 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

சொந்த செலவில் சாலையை சீரமைத்த விவசாயிகள்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அரியாபுரம், வடக்கலுர், பெரியணை, பள்ளிவிளங்கால், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாயையொட்டி மண் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள் தோட்டங்களில் இருந்து விளை பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர்.

இதற்கிடையில் மண் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக மாறியது. இதை தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து நேற்று விவசாயிகள் தங்களது சொந்த செலவில் மண் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story