கோவையில் 1569 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்


கோவையில் 1569 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 27 Feb 2022 9:49 PM IST (Updated: 27 Feb 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 1569 இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கோவை

கோவை மாவட்டத்தில் 1569 இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து

கொரோனா குறைந்ததால் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் 1,569 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 5 வயதுக்கு உட்பட்ட 3.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட் டது. இந்த ஆண்டு 3 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் என கிராமப்புறங்களில் 1,190 இடங்கள், நகர்ப்புறங்களில் 379 இடங்கள் என மொத்தம் 1569 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டது.

6,536 ஊழியர்கள்

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான பஸ் நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், 18 நடமாடும் சிறப்பு மையங்கள் மூலமும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் என 6 ஆயிரத்து 536 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது டீன் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா  தொடங்கி வைத்தார். இதில் நகர் நல அலுவலர் சதீஷ்குமார், டாக்டர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story