‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Feb 2022 10:08 PM IST (Updated: 27 Feb 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 


கிணற்றால் விபத்து அபாயம் 
சின்னமனூரை அடுத்த அப்பிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியில் சாலையோரத்தில் உள்ள கிணறு மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கிணறு இருப்பது
 தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, அப்பிப்பட்டி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்
எரியோட்டை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் உள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், நல்லமநாயக்கன்பட்டி.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
உத்தமபாளையம் தாலுகா கோம்பை காலனி பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை.

பகலில் எரியும் தெருவிளக்குகள் 
குஜிலியம்பாறை தாலுகா பாளையத்தை அடுத்த முத்தம்பட்டியில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன. ஆனால் இரவில் முறையாக எரிவதில்லை. எனவே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வா, முத்தம்பட்டி.

Next Story