உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதியுதவி
விருதுநகரில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
விருதுநகர்,
தமிழகத்தில் 1993-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்து அனைத்து மாவட்டங்களில் பணியாற்றுபவர்கள் காக்கும் கரங்கள் என்ற அமைப்பை வைத்துள்ளனர். இவர்கள் தங்களுடன் பணியில் சேர்ந்த சக போலீஸ் நண்பர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் கடந்த 25.12.2021-ல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் அவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதியிடம் ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கினர்.
Related Tags :
Next Story