வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ


வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ
x
தினத்தந்தி 28 Feb 2022 7:13 PM IST (Updated: 28 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து உள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வர தொடங்கி விட்டன.

இந்தநிலையில் நேற்று மாலையில் கோத்தகிரி தாலுகா கட்டபெட்டு பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகே உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதை கண்ட பொதுமக்கள், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் மாதன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்றனர். 

ஆனால் காட்டுத்தீ ஏற்பட்ட இடத்துக்கு அருகில் வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் தீயணைக்கும் கருவிகளை சுமந்து கொண்டு நடந்து சென்றனர். பின்னர் அந்த கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில் வனத்துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.


Next Story