வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டை2 பேர் கைது
வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டை2 பேர் கைது
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்ட மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் உத்தரவின்பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் வனத்துறையினர் நேற்று அதிகாலை சிறுமுகை பகுதியில் உள்ள பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப்பகுதிகளில் வனவிலங்கு வேட்டை கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சத்தியமங்கலம் -மேட்டுப்பாளையம் சாலையில் வந்த ஒரு காரை வனப் பணியாளர்கள் நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் காரில் வந்த கும்பல், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். உடனே வனத்துறையினர் வனத்துறை வாகனத்தில் அவர்களை விரட்டிசென்று கோவில் மேடு பகுதியில் அந்த வாகனத்தின் குறுக்கே நிறுத்தி அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது திடீரென காரின் நடுப்புற இருக்கையில் இருந்த 3 நபர்கள் காரின் இரு புறமும் கதவுகளைத் திறந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த நிலையில் காரில் இருந்த கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் சேலம் ஓமலூரைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 33), சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த (மணி28) என்பதும் அவர்கள் மான் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிக்காத நிலையில் இருந்த 3 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story