தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை


தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 28 Feb 2022 10:18 PM IST (Updated: 28 Feb 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கோட்ட தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியது.

சிவகங்கை,

சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் லெட்சுமணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசின் தங்கப்பத்திர விற்பனை நேற்று தொடங்கியது. வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் இந்த தங்கப்பத்திர விற்பனை நடைபெறுகிறது. ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.5,109 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும் 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் தெரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story