வண்டுறை மாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா


வண்டுறை மாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 28 Feb 2022 10:23 PM IST (Updated: 28 Feb 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.நேற்று இரவு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், நெய், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி எடுத்தல், ஊஞ்சல் காட்சி ஆகியவை இன்றும்(செவ்வாய்க்கிழமை)், மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி நாளையும்(புதன்கிழமை) நடக்கிறது. 

Next Story