புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 11:31 PM IST (Updated: 28 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்றவாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாய் தாழ்வாக அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், அருணகிரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாக்காய்க்குளம் கிராமத்தில் தெற்கு தெருவில் இருந்து நடுத்தெருவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உயரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் போதிய அளவு குழாயில் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை தாழ்வாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மாக்காய்க்குளம், பெரம்பலூர்.
 ''தினத்தந்தி'' புகார் பெட்டிக்கு நன்றி 
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில்  அரசு மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இதன் அருகேயுள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று  ''தினத்தந்தி'' புகார் பெட்டியில் செய்தி பிரசுரம் ஆனது.  இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை மூடி சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ''தினத்தந்தி''நாளிதழுக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை.
தார்சாலை அமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே ஓலப்பாளையம் பிரிவு சாலை எதிரில் இருந்து தனியார் கல்லூரி பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மண் சாலை பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த மண் சாலையை சீரமைக்காததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமாக காணப்படும் மண்சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வக்குமார், புன்னம்சத்திரம், கரூர்.

Next Story