வீரக்குமாரசுவாமி கோவிலில் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி
வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
தேர்நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறும். விழாவில் இந்த கோவிலைச்சேர்ந்த 11 குலத்தவர்கள் கலந்துகொள்வார்கள்.
அதுேபால் இந்த ஆண்டு 139-வது மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும், கடந்த 23-ந்தேதி காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைத்தல் பிறகு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது,
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பள்ளய பூஜையுடன் தொடங்கி இரவு 7 மணிக்கு தேர் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம், திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிறகு சுவாமி தேர்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளையும் நடக்கிறது.
மண்டப கட்டளை
வருகிற 4-ந்தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 5-ந்தேதி தனஞ்செய குலத்தவர்கள், 6-ந்தேதி மாட குலத்தவர்கள், 7-ந்தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 8-ந்தேதி வடமுக குலத்தவர்கள், 9-ந்தேதி ஓதாள குலத்தவர்கள், 10-ந்தேதி இலுப்பை கிணறு தனஞ்செய குலத்தவர்கள், 11-ந்தேதி கல்லிகுலத்தவர்கள், 12-ந்தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 13-ந்தேதி நரிப்பழனி கவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 14-ந்தேதி ஆதி கருப்பன் வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 15-ந்தேதி பலிஜவார் குலத்தவர்களின் மண்டப கட்டளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்த கோவில் தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் ்துறையினரும் செய்து வருகின்றனர்.
சிவராத்திரி
தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கோவில் வளாகத்தில் கடைகள் அமைத்துக்கொள்ளவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும், மற்ற திருவிழா நாட்களில் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும், கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.
முக கவசம் அணியாத பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமாய் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story