உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாமல் வந்தவாசி மாணவன் தவிப்பு


உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாமல் வந்தவாசி மாணவன் தவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 11:57 PM IST (Updated: 28 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாமல் வந்தவாசி மாணவன் தவித்து வருகிறார்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கெஜலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிராஜா. ஸ்டுடியோ உரிமையாளர். இவரது மகன் வானவன், உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் ஒரே அறையில் தங்கி மருத்துவப்படிப்பை படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவர் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் உடனே தமிழகம் செல்ல விமானம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் போர் தொடங்கி விட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் அவர் அங்கு தவிப்புக்குள்ளாகி வருகிறார். 
எனவே வானவனை மீட்டு உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story