காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.77 லட்சத்தில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவை


காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.77 லட்சத்தில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவை
x
தினத்தந்தி 1 March 2022 6:22 PM IST (Updated: 1 March 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவையை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

4 புதிய ஆம்புலன்சுகள்

பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் ‘108’ அவசரகால ஊர்தி சேவை திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இச்சேவைகள் மேலும் துரிதமாக கிடைக்கும் வகையில், காலதாமதத்தை குறைத்திட புதிதாக 108 அவசரகால வாகனங்களின் சேவையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.77 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 4 புதிய 108 ஆம்புலன்சு ஊர்தி சேவையை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூடுதலாக இணைப்பு

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, ‘இந்த புதிய அவசர ஊர்தியானது காஞ்சீபுரம் மாவட்டத்தில் பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஐயப்பன்தாங்கல் பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படும்.

தற்போது கூடுதலாக, அவசரகால வாகனங்கள், இச்சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், அதிக அளவில் பொதுமக்கள் பயனடைவதோடு, சேவைக்காக காத்திருக்கும் நேரமும், மருத்துவமனைக்கு சென்றடையும் கால அளவும் குறையும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் கிருஷ்ணகுமாரி மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story