மகாசிவராத்திரி விழா
அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தளூர் கிராமத்தில் பழமையான கையிலையார்ந்தகன்னி அம்மன் உடனுறை மனம்புரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 கால சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தளூர் கிராமத்தில் பழமையான கையிலையார்ந்தகன்னி அம்மன் உடனுறை மனம்புரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புதியதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு செட்டம்பர் மாதம் மகாகும்பாபிஷேகம் நடந்தது.
இந்த நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை(புதன்கிழமை) அதிகாலை வரை 4 கால சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story