திருக்கோவிலூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஊராட்சி பெண் செயலாளர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
திருக்கோவிலூர் அருகே அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி பெண் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் நடவடிக்கை மேற்கொண்டார்
திருக்கோவிலூர்
வீடு கட்டும் திட்டம்
திருக்கோவிலூர் அருகே உள்ள பொன்னியந்தல் கிராம பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் அலமேலு (வயது40). இவர், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில்(பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) 2021- 22-ம் ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் 4 பேருக்கு அரசின் சார்பில் வீடு வழங்க பரிந்துரை செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
கலெக்டர் உத்தரவு
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஊராட்சி செயலாளர் அலமேலு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story