கிராம கோவில்களில் குவிந்த பக்தர்கள்


கிராம கோவில்களில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 1 March 2022 8:30 PM GMT (Updated: 1 March 2022 8:30 PM GMT)

மகா சிவராத்திரி விழாவைெயாட்டி கிராம கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

வத்திராயிருப்பு, 
மகா சிவராத்திரி விழாவைெயாட்டி கிராம கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். 
சிறப்பு பூஜை 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் வத்திராயிருப்பை சுற்றி உள்ள கோவில்களில் குவிந்தனர்.
கான்சாபுரம் அத்தி கோவில், கருப்பசாமி கோவில், கூமாபட்டி சப்பானி முத்தையா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அய்யனார் கோவில், மூவரைவென்றானில் உள்ள மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.  
நேர்த்திக்கடன் 
சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் குலதெய்வக் கோவில்களுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதேபோல கூமாபட்டி முனியப்ப சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
வத்திராயிருப்பு காசிவிசுவநாதர் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடந்தது. மகாராஜபுரம் ஆலமரத்தடி கருப்பசாமி கோவில், மாத்தூர் கருப்பசாமி கோவில் உள்பட கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு வைத்தியநாத சுவாமி கோவில் விடிய, விடிய பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு வைத்தியநாதசுவாமி கோவில் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கு பார்த்தாலும் கார், வேன்களில் பக்தர்கள் சென்ற வண்ணம் இருந்தனர். சிவராத்திரி விழாவையொட்டி பால்கோவா விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

Next Story