ஒருநபர் குழு விசாரணை இன்று நடக்கிறது
ஒருநபர் குழு விசாரணை இன்று நடக்கிறதுஒருநபர் குழு விசாரணை இன்று நடக்கிறது
கோவை
கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் தலைவரும் நீதிபதியுமான அபய் மனோகர் சப்ரே முன்னிலையில், வழக்கு விசாரணை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மகாவீர் பிளாண்டேஷன் லிமிடெட், மஞ்சு ஸ்ரீபிளாண்டேஷன் தோட்ட நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஹை பாரஸ்ட் எஸ்டேட் தோட்ட நிறுவனங்கள், அதில் பணியாற்றிய முன்னாள், தற்போதைய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






