ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்


ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 3 March 2022 6:00 PM IST (Updated: 3 March 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க அரசின் நிதி பெற காரணமாக விளங்கிய டாக்டர் சத்யஜித் மகோபத்ராவை பாராட்டி விருது வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் தினம் 2022 நிகழ்ச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இதற்கு எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தோ-அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் நந்தினி கண்ணன் கலந்து கொண்டு 146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க அரசின் நிதி பெற காரணமாக விளங்கிய டாக்டர் சத்யஜித் மகோபத்ராவை பாராட்டி விருது வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ரவிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் பொன்னுசாமி, தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன் மற்றும் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story