மயான கொள்ளை திருவிழா


மயான கொள்ளை திருவிழா
x
தினத்தந்தி 3 March 2022 6:19 PM IST (Updated: 3 March 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம் குருகுலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் நாககன்னி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் லிங்கேஸ்வரருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

நேற்று மதியம் ஒரு மணியளவில் மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது. இதேபோல் செய்யூர் அடுத்த சூனாம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நான்கு கால பூஜையுடன் அபிஷேக ஆராதனை நடைபெற்று நேற்று மதியம் 1 மணியளவில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த புதினா தோட்டத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானகொள்ளை நடைபெற்றது.

உத்திரமேரூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், டிராக்டர், பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி போன்றவற்றை இழுத்து வந்தனர். திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், துலுக்கானத்தம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.


Next Story