வைக்கோல் விலை கிடுகிடு உயர்வு
நெகமம் பகுதியில் உலா் தீவனம் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
நெகமம்
நெகமம் பகுதியில் உலா் தீவனம் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
உலர் தீவனம் தட்டுப்பாடு
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, அதிகளவு கறவை மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்குவது அவசியமாகும். தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு, தரிசு நிலங்கள் பசுமைக்கு மாறியுள்ளதால், பசுந்தீவனத்துக்கு தட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், வைக்கோல், மக்காச்சோளம் உள்பட உலர் தீவனங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, நெகமம் பகுதியில் கால்நடை வளர்ப்போர், உடுமலை, பழனி பகுதிகளில் இருந்து வைக்கோல் வாங்கி வருவார்கள். ஆனால், தேவைக்கேற்ப இப்பகுதியில், வைக்கோல் கிடைப்பதில்லை. எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து, வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர்.
ஒரு கட்டு ரூ.220-க்கு விற்பனை
தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலிருந்து, வைக்கோல் கட்டு ஒன்று ரூ.220-க்கு வாங்கி வருகின்றனர். வைக்கோல் விைல தொடர்ந்து கிடுகிடுவென அதிகரித்து வருவதாக கால்நடைகள் வளர்ப்போர் கூறி வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கால்நடைகளுக்கான உலர் தீவனம் மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டு வருகிறோம். சீசன் சமயங்களில், பிற மாவட்டங்களில் இருந்து உலர் தீவனத்தை, கூட்டாக இணைந்து வாங்கி வருகிறோம்.வியாபாரிகளும், டெல்டா மாவட்டங்களில் இருந்து நெகமம் உட்பட பகுதிகளுக்கு வைக்கோலை கொண்டு வந்து இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். கால்நடைத்துறை சார்பில் மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story