சர்க்கரை விநாயகர் கோவிலில் மண்டல பூஜை
கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள சர்க்கரை விநாயகர் கோவிலில் புதிதாக கர்பகிரகம், அர்த்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் காலை 8.30 மணிக்கு நந்தா தீபம் ஏற்றப்பட்டு பூஜை நடந்து வருகிறது. மேலும் தினமும் இரவு 7 மணிக்கு சர்க்கரை விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். இதையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story