மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை உருட்டுக்கட்டையால் தாக்கிய மகன் கைது
மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை உருட்டுக்கட்டையால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு பராங்குசாபுபரத்தை சேர்ந்தவர் விஜயராஜா என்ற சுரேஷ் (வயது 39). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தாய் பேச்சியம்மாள் (வயது 65) என்பவரை அடிக்கடி மிரட்டி பணம் வாங்கிச்சென்று குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராஜா, பேச்சியம்மாளிடம் மது குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், பேச்சியம்மாளை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மப்பேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், விஜயராஜாவை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story