கோவை மாநகராட்சி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல்
கோவை மாநகராட்சி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
கோவை
கோவை மாநகராட்சி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. ,இதில் மொத்தம் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 73 இடங்களில் வெற்றி பெற்றது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 இடங்கள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தலா 4 இடங்கள், அ.தி.மு.க., ம.தி.மு.க. தலா 3 இடங்கள், கொ.ம.தே.க. 2, ம.ம.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. தேர்ந்தெடுக்கப் பட்ட கவுன்சிலர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.
மேயருக்கான மறைமுக தேர்தல்
இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் விக்டோரியா ஹாலில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேயர், துணை மேயரை தேர்வு செய்ய உள்ளனர்.
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மேயர், துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிட வேட்பு மனுக்கள் நேற்று காலை 9 மணி முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த வேட்பு மனுக்களை காலை 9 மணி வரை தேர்தல் அதிகாரியிடம் வழங்கலாம்.
அனைத்து ஏற்பாடுகளும் தயார்
இதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு அவை கூடும். மேயர் பதவிக்கு ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு அளித்திருந்தால் வாக்கெடுப்பு நடக்கும்.
இதற்கான வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச்சீட்டு என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்வார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மேயருக்கு சான்றிதழ், செங்கோல் வழங்கி, அங்கி அணிவிக்கப்பட்டு மேயருக்கான இருக்கையில் அமரவைக்கப்படுவார். இதுபோன்றுதான் துணை மேயருக்கான மறைமுக தேர்தலும் நடக்கும்.
Related Tags :
Next Story