சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்


சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 March 2022 3:04 PM IST (Updated: 4 March 2022 3:04 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) அலுவலகத்தில் மார்ச் மாதத்திற்கான உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி என்ற குறைதீர்வு நிகழ்ச்சி வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

இதில் நீண்ட கால குறைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே தீர்க்கப்படாத குறைகளைக் கொண்ட எந்தவொரு சந்தாதாரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய உரிய ஆவணங்களுடன் குறைதீர்வு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் என்று சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி முதலாவது கமிஷனர் பி.ஹங்சிங் தெரிவித்து உள்ளார்.

Next Story