காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் மேயராகும் பெண் என்ஜினீயர்
காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக பெண் என்ஜினீயர் தேர்வாக உள்ளார்.
மேயர் வேட்பாளர்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இதில் 36-வது வார்டு உறுப்பினர் வே.ஜானகிராமன் காலமானதை தொடர்ந்து 50 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது.
இதில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளரான எம்.மகாலட்சுமி யுவராஜ் காஞ்சீபுரத்தின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல 22-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குமரகுருநாதன் துணை-மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதுகலை பட்டம்
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.மகாலட்சுமி யுவராஜ்(வயது 36) முதுகலைப் பட்டம் பெற்றவர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். அந்த பணியிலிருந்து விலகி மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது கணவர் யுவராஜ் காஞ்சீபுரம் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆர்.குமரகுருநாதன் காஞ்சீபுரத்தில் உணவகங்களை நடத்தி வரும் தொழிலதிபர்.
Related Tags :
Next Story