வனப்பகுதியில் இருந்து வெளியேறி நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் காட்டு யானைகள்
வால்பாறையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி நீர்நிலைகளுக்கு காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. அதனால் பொதுமக்கள் ஆறுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி நீர்நிலைகளுக்கு காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. அதனால் பொதுமக்கள் ஆறுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
சுட்டெரிக்கும் வெயில்
வால்பாறை பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்தே வெயில் காலம் தொடங்கியது. ஆனால் பெரியளவிலான தாக்கம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் கோடைமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இது நாள் வரை கோடைமழை பெய்யவில்லை. ஒருசில சமயத்தில் மாலை நேரத்தில் மேகங்கள் சூழ்ந்து வந்த போதும் கோடைமழை பெய்யவில்லை. பகல் நேரத்தில் வெப்ப நிலை 26 டிகிரி செல்சியசாக இருந்து வருகிறது.
இதனால் வால்பாறை மற்றும்அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் வனப்பகுதிகளும் எஸ்டேட் பகுதிகளும் வறட்சியை சந்தித்து வருகிறது. எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது.
நீரோடைகளுக்கு...
கோடைக்காலத்தில் தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல், கொப்பள நோய் தாக்குதல் போன்ற பல்வேறு நோய் தாக்கி வருகிறது. இதனால் பச்சை தேயிலை உற்பத்தி பாதித்து வருகிறது.
வால்பாறை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரோடைகள், ஆறுகள் எல்லாம் வறண்டு விட்டது. மேலும் கோடைக்காலம் தொடங்கி விட்டதால் ஆகஸ்டு மாதத்தில் வால்பாறை வனப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் கேரள வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஆறுகளுக்கும் நீரோடைகளுக்கும் செல்லத் தொடங்கி விட்டன.
வனத்துறையினர் எச்சரிக்கை
வால்பாறை அருகில் உள்ள சேடல்டேம் ஆற்று பகுதிக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கூட்டம் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சேடல்டேம் ஆற்றோரப் பகுதிக்கு பட்டபகலில் குட்டிகளுடன் வந்து சேடல்டேம் ஆற்றில் தண்ணீர் குடித்து செல்கிறது. வறட்சி காரணமாக காட்டு யானைகள் நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருவதால் எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், விடுமுறை நாட்களில் எஸ்டேட் பகுதிக்கு அருகில் இருக்கும் நீரோடைகள் ஆறுகளுக்கு குளிக்க செல்வது, துணி துவைக்க செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story