கோவையில் வெறிச்சோடிய மெகா தடுப்பூசி முகாம்கள்


கோவையில் வெறிச்சோடிய மெகா தடுப்பூசி முகாம்கள்
x
தினத்தந்தி 6 March 2022 2:45 AM IST (Updated: 6 March 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மெகா தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவை

கோவையில் 23-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி பகுதிகளில் 226 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும். இந்த முகாமில், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

ஆனாலும் நேற்று குறைந்த அளவிலானவர்களே தடுப்பூசி செலுத்த வந்தனர். இதனால் பல தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 ஆயிரம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் 2-வது தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உடையவர்கள். எனவே 100 சதவீத  பாதுகாப்பு பெற அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக உங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம், அல்லது ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story