நீடாமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2022 12:00 AM IST (Updated: 6 March 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி நீடாமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி நீடாமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம்

கொரோனா கால கட்டத்திலும் தனியார் பள்ளிகள் கட்டாய கட்டண வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கிராமப்புற மாணவர்கள் அதிகம்படிக்கும் நீடாமங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அருண்குமார், ஒன்றிய பொருளாளர் பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊர்வலம்

மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் வேலவன், மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் அண்ணா சிலை பகுதியில் இருந்து பெரியார் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். 

Next Story