பெண் வக்கீல்களுக்கு விளையாட்டு போட்டி


பெண் வக்கீல்களுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 6 March 2022 3:57 PM IST (Updated: 6 March 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

பெண் வக்கீல்களுக்கு விளையாட்டு போட்டி

உலக மகளிர் தினவிழா நாளைசெவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண் வக்கீல்கள் மற்றும் கோர்ட்டுகளில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு, கனியும் கரண்டியும், ஊசியில் நூல் கோர்த்தல், ஞாபகத்திறன் விளையாட்டு, சொற்கள் உருவாக்குதல், பாட்டிலில் நீர் நிரப்புதல், லக்கி கார்னர், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் சப் கோர்ட்டு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தன. இதில் பெண் வக்கீல்கள் மற்றும் கோர்ட்டுகளில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப் கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளைத்தொடங்கி வைத்தார். மடத்துக்குளம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  ஆர்.பாக்கியராஜ், வக்கீல்கள் சங்கத்தலைவர் கே.ஶ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வருகிற 9 ந் தேதி  மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.


Next Story