மின்கம்பி உரசி லாரி தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி சாவு


மின்கம்பி உரசி லாரி தீப்பிடித்து  டிரைவர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 6 March 2022 5:48 PM IST (Updated: 6 March 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

மின்கம்பி உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நல்லூர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 24). இவர், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சி.எம்.டி.ஏ. தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து மினி கன்டெய்னர் லாரியில் சரக்கு ஏற்றுவதற்காக சென்றார். அப்போது கன்டெய்னர் லாரியை பின்பக்கமாக இயக்கியபோது அங்கு இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் லாரி உரசியது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்து, முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் வசந்தகுமார், கீழே இறங்கி தப்பிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் வசந்தகுமார், டிரைவர் இருக்கையிலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். கன்டெய்னர் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story