காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 385 இடங்களில் நடந்தது.
385 இடங்களில்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 385 இடங்களில் காலை 9 மணி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பலர், இன்னும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம் பஸ் நிலையம், அதிக மக்கள் கூடும் இடம், வணிக வளாகம், குடியிருப்போர் நல சங்க வளாகம் மற்றும் தொண்டு நிறுவன கட்டிடங்கள் என பல இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
2 லட்சத்து 44 ஆயிரத்து 203 நபர்கள்
இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 203 நபர்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில், பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும், தடுப்பூசி செலுத்திகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
Related Tags :
Next Story