காஞ்சீபுரத்தில் பொதுமக்களே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மேம்பாலம்


காஞ்சீபுரத்தில்  பொதுமக்களே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மேம்பாலம்
x
தினத்தந்தி 6 March 2022 6:22 PM IST (Updated: 6 March 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பொதுமக்களே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மேம்பாலத்தை போலீசார் பெரிய குழாய்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர்.

காஞ்சீபுரம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்க காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது.தற்போது மேம்பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.நேற்று காலை காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலைய ரெயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பொதுமக்களே திறந்தனர்

இதனால் திறப்பு விழாவுக்கு காத்திருந்த ரெயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதை அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து ரெயில்வே மேம்பாலத்தில் பணிகள் நடைபெறுவதாக கூறி பெரிய குழாய்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை செல்லவும், சென்னையில் இருந்து காஞ்சீபுரம் சந்திப்பை கடக்க 5 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக கடக்க வேண்டிய நிலை உருவானது. 4 மணி நேரத்துக்கு பின்னர் ரெயில்வே கேட் பழுது சரி செய்யப்பட்டு வாகனங்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன.


Next Story