பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் மாமல்லபுரம் வருகை


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் மாமல்லபுரம் வருகை
x
தினத்தந்தி 6 March 2022 6:35 PM IST (Updated: 6 March 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர் மாமல்லபுரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும் சம்பத் (வயது 20) என்ற மாணவர் விசாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பல்வேறு நகரங்கள், சுற்றுலா மையங்கள் வழியாக 50 நாட்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கினார். சென்னை வந்த மாணவர் சம்பத் இன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள அர்ச்சுனன் தபசு புராதன சின்னம் அருகில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகி ஸ்ரீதர், சுற்றுலா வழிகாட்டிகள் பாலன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் மாணவரின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரை பாராட்டி வரவேற்றனர். 

சுற்றுலா வந்திருந்த பயணிகள் பலர் மாணவரின் சமூக விழிப்புணர்வு செயலை பாராட்டி, சைக்கிள் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவருடன் நின்று பலர் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மாமல்லபுரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர் சம்பத், பின்னர் தனது சைக்கிள் பயணத்தை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்றார்.


Next Story