மாநில கைப்பந்து போட்டி
கோத்தகிரியில் மாநில கைப்பந்து போட்டி தொடங்கியது.
கோத்தகிரி
கோத்தகிரியில் மாநில கைப்பந்து போட்டி தொடங்கியது.
கைப்பந்து போட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 10-வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி, காந்தி மைதானத்தில் தொடங்கியது. இந்த கைப்பந்து போட்டியில், நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த48 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் போட்டியின் முதல் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.ஜே. அணியும், கோத்தகிரி இந்திரா நகர் அணியும் பங்கேற்று விளையாடின.
லீக் சுற்று
மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதல் செட்டை இந்திரா நகர் அணியும், 2-வது செட்டை கோவை அணியும் கைப்பற்றின. எனவே வெற்றியை தீர்மானிக்க நடைபெற்ற 3-வது செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திரா நகர் அணி வெற்றி பெற்றது.
3 செட்கள் கொண்ட போட்டியில் 2 செட்களை கைப்பற்றிய இந்திரா நகர் அணி முதல் போட்டியில் வென்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
ரொக்கப்பரிசு
இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 15 ஆயிரத்து 10 ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கேடயம், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 10 ஆயிரத்து 10 ரூபாய் மற்றும் கேடயம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 7 ஆயிரத்து 10 ரூபாய் மற்றும் கேடயம், 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 ஆயிரத்து 10 ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கோத்தகிரி கைப்பந்து கழக நிர்வாகிகள் சேகர், பரதன், சண்முகம், ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story