காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடிய வாகன நிறுத்துமிட ஊழியர் கைது


காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடிய வாகன நிறுத்துமிட ஊழியர் கைது
x
தினத்தந்தி 6 March 2022 8:38 PM IST (Updated: 6 March 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடிய வாகன நிறுத்துமிட ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோவை

கோவை இருகூர் ஜெய்ஸ்ரீ நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 47). தனியார் கட்டுமான நிறுவன ஊழியர். இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். 

பின்னர் அங்குள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இதையடுத்து அவர் கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

 இதில் வாகன நிறுத்துமிடத்தில் கார்களுக்கு டோக்கன் வழங்கும் ஊழியரான கோவை தெலுங்கு வீதியை சேர்ந்த சேகர் (42) காரில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story