கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.33 லட்சம் வரி வசூல்


கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.33 லட்சம் வரி வசூல்
x
தினத்தந்தி 6 March 2022 8:38 PM IST (Updated: 6 March 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் ரூ‌.33 லட்சம் வரி வசூலானது.

கோவை

கோவை மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் ரூ‌.33 லட்சம் வரி வசூலானது.

மாநகராட்சி வரி

கோவை மாநகராட்சிக்கு 2021-22 நடப்பு நிதியாண்டின் 2-ம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி ஆகியவற்றை மக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அலுவலகம் செயல்படும் என ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவித்தார்.

ரூ.33 லட்சம் வசூல்

 இதன்படி கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் நேற்று வரி வசூல் மையங்கள் திறந்திருந்தன. இதில் காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வரி செலுத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் உள்ள 21 வரி செலுத்தும் மையங்களில் நேற்று 830 சொத்து வரி இனங்களுக்கு ரூ.22 லட்சத்து 9 ஆயிரத்து 194-ம், 535 குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்து 447 உள்பட மொத்தம் ரூ.33 லட்சத்து 4 ஆயிரத்து 36 வசூல் ஆனது. 

இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் திறந்து இருக்கும். மேலும், வரி, கட்டண தொகைகளை கடன் அட்டை அல்லது இணைய வங்கி மூலமாக தங்களுக்கு விருப்பமான முறையை தேர்ந்தெடுத்து tnurbanepay.tn.gov.in என்ற நிர்வாக இணையதள முகவரி வாயிலாகவும் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story