ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுறறுலா பயணிகள் குவிந்தனர். எனவே கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுறறுலா பயணிகள் குவிந்தனர். எனவே கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆழியாறு தடுப்பணை
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் கீழ்ப் பகுதியில் ஆற்றின் குறுக்கே ஆழியார் தடுப்பணை உள்ளது. இந்த ஆற்றில் சுழல் மற்றும் புதைமணல் உள்ளது. ஆற்றின் இந்த தன்மை அறியாமல் குளிக்க சென்றவர்களில் பலர் சுழல், புதைமணலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
எனவே இந்த தடுப்பணைக்கு செல்ல சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது.
தடையை மீறி குவிந்தனர்
இந்த நிலையில் ஆழியாற்றில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லாததால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிமையான இடத்துக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆழியாறு தடுப்பணையில் ஏரளாமான சுற்றுலா பயணிகள் தடையை மீறி குவிந்தனர்.
அவர்கள் அந்த தடுப்பணையில் இறங்கி குளித்ததுடன் ஆழமான பகுதிக்கும் சென்றனர்.
கடும் நடவடிக்கை
அங்கு சுழல், புதை மணல் இருக்கிறது என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தும் அதையும் பொருட்படுத்தாமல் உள்ளே இறங்கி குளித்து ஆட்டம்போட்டனர். இதை தடுக்க யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஆபத்தான பகுதி என்பதால் ஆழியாறு தடுப்பணைக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி அங்கு உள்ள ஆபத்தை அறியாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.
இதை தடுக்க ஆற்றில் உள்ள தடுப்பணைக்கு செல்லும் வழியை அடைப்பதுடன் அங்கு யாரும் செல்லாதவாறு தடுப்புவேலி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story